Kalaiyarasan

@Kalaiyarasan

location_onAmsterdam
ஈழ‌த்தில் வாழ்ந்த‌ ப‌ண்டைய‌ நாகா இன‌த்த‌வ‌ர் த‌மிழ‌ர்க‌ள் என்று வாதாடும் போக்கு, ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌ர்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌வ‌லாக‌ உள்ள‌து. ஆனால், அவ‌ர்க‌ளிட‌ம் "நாகர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்" என்பத‌ற்கு ஆதார‌ம் என்ன‌வென்று கேட்டால் கிடைக்காது. அண்மையில் புதுவிதி (15-10-2016) ப‌த்திரிகையில், முனைவ‌ர் ஜெ. அர‌ங்க‌ராஜ் எழுதிய‌ "பௌத்த‌மும் ஈழ‌மும்" க‌ட்டுரையில் ஒரு ஆதார‌த்தை காட்டுகின்றார். ம‌ணிமேக‌லை காப்பிய‌த்தில் வ‌ரும் ஆபுத்திர‌ன் க‌தையில் வ‌ரும் நாக‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் த‌மிழ்ப் பெய‌ர்க‌ளாக‌ இருப்ப‌தை சுட்டிக் காட்டுகிறார். உதார‌ண‌த்திற்கு, நாக‌ அர‌ச‌ன் வ‌ளைவ‌ண‌ன் தூய‌ த‌மிழ்ச் சொல் என்கிறார். இதே க‌ட்டுரையில் வ‌ரும் அதே நாக‌ அர‌ச‌னின் ம‌க‌ளின் பெய‌ர் பீலிவ‌ளை. இது சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌ பெய‌ர். இன்றைக்கும் அந்த‌ப் பெய‌ரில் ஊர்க‌ள் உள்ள‌ன‌. (உதார‌ண‌ம்: பீலிய‌கொட‌) சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் ம‌ணிமேக‌லை த‌ம‌து காப்பிய‌ம் என்றும், "நாக‌ர்க‌ள் சிங்க‌ள‌வ‌ர்க‌ள்" என்றும் உரிமை கோருகின்ற‌ன‌ர். இங்கே ம‌றைக்க‌ப் ப‌டும் உண்மை ஒன்றுள்ள‌து. நாக‌ர்க‌ள் இல‌ங்கை முழுவ‌தும் வாழ்ந்த‌ன‌ர். இன்றைக்கும் புத்த‌ கோயில்க‌ளின் காவ‌ல் தெய்வ‌மாக‌ நாக‌ தேவ‌ன் சிற்ப‌ங்க‌ளை காண‌லாம். ம‌ணிமேக‌லை எழுத‌ப் ப‌ட்ட‌ கால‌த்தில், த‌மிழ் பௌத்த‌ ம‌த‌த்தின் மொழியாக‌ இருந்த‌து. த‌மிழ்நாட்டில் இருந்து விர‌ட்ட‌ப் ப‌ட்ட‌ த‌மிழ் பௌத்த‌ர்க‌ள் இல‌ங்கைத் தீவில் குடியேறினார்க‌ள். இது ந‌ட‌ந்து, சில‌ த‌சாப்த‌ங்க‌ளுக்குப் பிற‌கு சிங்க‌ள‌ம் என்ற‌ புதிய‌ மொழி உருவான‌து. அது அர‌ச‌ வ‌ம்ச‌த்தின‌ராலும், பௌத்த‌ பிக்குக‌ளாளும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து. ப‌ண்டைய‌ காப்பிய‌மான‌ ம‌ணிமேக‌லை ஒரு வ‌ர‌லாற்று ஆவ‌ண‌ம் அல்ல‌. அதை த‌மிழில் எழுதிய‌வ‌ர் வாசிப்ப‌த‌ற்கு இல‌குவாக‌ த‌மிழ்ப் பெய‌ர்க‌ளை சூட்டி இருப்பார். காப்பிய‌த்தில் வ‌ரும் பெய‌ர்க‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டு "அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள்" என்று நிறுவ‌ முடியாது. ப‌ண்டைய‌ சீன‌க் காப்பிய‌ங்க‌ளிலும் சில‌ தொலைதூர‌ நாடுக‌ள் ம‌ன்ன‌ர்க‌ள் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள் வ‌ருகின்ற‌ன‌. அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளும் சீன‌ப் பெய‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌. ஆனால், உண்மையில் அவ‌ர்க‌ள் சீன‌ர்க‌ள் அல்ல‌! அவை சீன‌ர்க‌ளின் உச்ச‌ரிப்புக்கு ஏற்ற‌வாறு மாற்ற‌ப் ப‌ட்ட‌ வேற்று மொழிப் பெய‌ர்க‌ள்.
0
remove_red_eye6
கிளிநொச்சியில் ஏழை மாணவ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ பாட‌சாலை அதிப‌ர்! //கிளிநொச்சி பார‌திபுர‌த்தில் உள்ள‌ பாட‌சாலை ஒன்றின் அதிப‌ர், ச‌ப்பாத்து (ஷூ) அணிந்து வ‌ராத‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் நோக்க‌த்துட‌ன், மாண‌வ‌ர்க‌ளின் கால‌ணிக‌ளை பாட‌சாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாண‌வ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ ச‌ம்ப‌வ‌ம் நேற்று முன்தின‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து. கிளிநொச்சி மாவ‌ட்ட‌ம் க‌ல்வியில் பின்த‌ங்கிய‌தும் வ‌றுமை நிலையிலுமுள்ள‌ மாவ‌ட்ட‌மாக‌ அடையாள‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து. இந்த‌ மாவ‌ட்ட‌த்தில் பார‌திபுர‌ம் மிக‌வும் பின்த‌ங்கிய‌ கிராம‌மாக‌ காண‌ப் ப‌டுகின்ற‌து. அங்கு வாழும் ம‌க்க‌ள் தாம் பெறும் வ‌ருமான‌த்தைக் கொண்டு த‌ம‌து அடிப்ப‌டைத் தேவைக‌ளையே பூர‌ண‌மாக‌ நிறைவேற்ற‌ முடியாத‌ நிலையில் உள்ள‌ன‌ர். போர் இட‌ம்பெற்ற‌ கிராம‌ங்க‌ளில் உள்ள‌ ம‌க்க‌ள் த‌ம‌து வாழ்க்கையை கொண்டு ந‌ட‌த்துவ‌த‌ற்கேற்ற‌ பொருளாதார‌ வ‌ழிமுறைக‌ள் இன்றி அவ‌ர்க‌ள், ஒரு வேளை உண‌வுக்காக‌ திண்டாடும் நிலை காண‌ப் ப‌டுகின்ற‌து. த‌ம‌து குடும்ப‌ வ‌ருமான‌த்தை அதிக‌ரித்துக் கொள்வ‌த‌ற்காக‌ பாட‌சாலைக்கு செல்லும் பிள்ளைக‌ளை கூலி வேலைக்கு அனுப்பும் அவ‌ல‌மும் தொட‌ர்கின்ற‌து. அந்த‌ ம‌க்க‌ளின் வ‌றுமையையும் க‌ஸ்ட‌த்தையும் அவ‌ர்க‌ளின் நிலையில் நின்று க‌ண்டுகொள்ள‌ வேண்டும். வ‌ருமான‌ம‌ற்ற‌ பெற்றோர் பிள்ளைக‌ளின் க‌ல்விக்கு என்ன‌ செய்ய‌ முடியும்? அவ‌ர்க‌ள் த‌ம‌து பிள்ளைக‌ளைப் பாட‌சாலைக்கு அனுப்புவ‌தே பெரிய‌ தியாக‌ம் என‌ எண்ணும் நிலை தான் கிளிநொச்சி மாவ‌ட்ட‌த்தில் காண‌ப் ப‌டிகின்ற‌து.// (நன்றி: த‌மிழ் மிர‌ர், 20 ஒக்டோப‌ர் 2016)
0
remove_red_eye2
Click to load more